எங்களைப் பற்றி (About Us)

தமிழ் மொழியை டிஜிட்டல் உலகில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி.

யார் இந்த "தமிழ் பேச்சு"?

தமிழ் பேச்சு (Tamil Pechu) என்பது தமிழ் மொழிக்கான ஒரு முழுமையான டிஜிட்டல் கருவிப் பெட்டி (Digital Toolkit). நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன், தமிழ் மொழியில் எழுதுவதை எளிதாக்கவும், அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவவும் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

எங்கள் நோக்கம்

தமிழ் தட்டச்சு (Typing) தெரியாதவர்கள் கூட, தங்கள் குரல் மூலமாகவே மிகத் துல்லியமாக தமிழ் ஆவணங்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான நோக்கம்.

குரல் வழி தட்டச்சு

பேசும் சொற்களை உடனுக்குடன் எழுத்தாக மாற்றும் அதிநவீன தொழில்நுட்பம்.

OCR & மொழிபெயர்ப்பு

படங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களைப் பிரித்தெடுக்கவும், மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கவும் உதவும் கருவிகள்.

TNPSC மாணவர்களுக்காக

அரசுத் தேர்வு எழுதுபவர்கள் தங்கள் குறிப்புகளை விரைவாக உருவாக்க பிரத்யேக எடிட்டர் வசதி.

எங்களின் உந்துசக்தி

இந்தத் தளம் இன்று ஒரு முழுமையான சேவையாக உருவெடுத்து மாபெரும் வெற்றி பெற, ஆரம்பத்திலிருந்தே சரியான ஆக்கமும் ஊக்கமும் தந்து எங்களை வழிநடத்தியவர் மதிப்பிற்குரிய சரளா அம்மா அவர்கள். அவர்களின் வழிகாட்டுதலின் படியே, இத்தளம் எளிய மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அந்தத் தொழில்நுட்பத்தை தமிழ் மொழியோடு இணைத்து, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்குப் பயனுள்ள வகையில் வழங்குவதே எங்களின் லட்சியம்.